2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு 43,200 கோடி ரூபாயும், கல்விக்காக 50,400 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

இது தவிர பாதுகாப்புச் செலவுகளுக்காக 36,700 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், சமூகப் பாதுகாப்பிற்காக 57,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரச வருமானத்தை 8.5 வீதத்தில் இருந்து 13 வீதமாக அதிகரிக்கவும், அரச வருமானத்தில் 90 வீதத்தை வரி மூலம் பெறவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனங்கள் 788,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version