முதியவர் ஒருவர் நடத்திய அசிட் வீச்சு தாக்குதலில் காயமடைந்த 11 வயது சிறுவன், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த சிறுவனின் தாத்தாவே இந்த அசிட் வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் இன்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துச் செல்வதற்கான பிள்ளைகளின் தந்தை பாடசாலைக்கு வந்திருந்ததாகவும் இதன்போது, அவரின் தந்தை இவ்வாறு அசிட் வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேகநபர் அம்பலாங்கொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version