முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் வெளியுறவுச் செயலராக இருந்தபோது அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ட்ரஸ் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு இடையேயான தனிப்பட்ட செய்திகள், உக்ரைன் போர் உட்பட, முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களும், தனிப்பட்ட உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் ‘தி மெயில்’ செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

கோடைகால டோரி தலைமைப் பிரச்சாரத்தின் போது இந்த ஹேக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் செய்தி மௌனம் காக்கப்பட்டது என்று செய்தித்தாள் கூறியது.

இவ்வாறு அவருடைய கைப்பேசி ஊடுருவப்பட்ட சம்பவம் குறித்து அப்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மற்றும் உயர் அதிகாரிகள் மூலம் ரகசியம் காக்கப்பட்ட நிலையில், லிஸ் ட்ரஸ் பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற பிறகு இத்தகவல் தெரியவந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில், சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தொழிலாளர் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

சைபர் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அமைச்சர்கள் உட்பட அனைத்து அரசு அதிகரிகளுக்கும் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அரச செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version