கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்றைய தினம் (28) வரையில் மத்திய மாகாணத்தில் இலையான் கடிக்கு 24 பேர் இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் கருத்து தெரிவிக்கையில், லிஸ்பானியர் என்ற புதிய தோல் நோய் ஈ கடியினால் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஈ கடியினால் ஏற்பட்ட தோல் நோய் குணமாகாமல் உள்ள நோயாளிகளுக்கு உடன் தகுந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நோய் குணப்படுத்த முடியும் எனவும், பரவும் தன்மை கொண்டதால் உடனே சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version