யாழ்.மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளவர்கள் சமுதாயமட்ட சமுர்த்தி சங்கத்தில் உறுப்பினர் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என சமுர்த்தி சமுதாய மற்றும் விளையாட்டு பிரிவுப் பணிப்பாளர் காமினி அபோய விக்ரம தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி சமுதாயமட்ட மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

சமுர்த்தி திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய ஒருவர் சமுர்த்தி பயனாளியாக தெரிவு செய்யப்படுவதற்கு சமுதாய மட்ட சமுர்த்தி சங்கத்தில் கட்டாயம் அங்கத்தவராக இருத்தல் வேண்டும்.

ஆனால் யாழ்.மாவட்டத்தில பலர் சமுதாயமட்ட சமுர்த்தி சங்கத்தில் அங்கத்துவர் இல்லாதவர்கள் சமுர்த்தி பயனாளிகளாக இருக்கின்ற நிலையில் உடனடியாக அவர்கள் தமது அங்கத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக பயனாளிகளை நீக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version