60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டை வந்தடைந்துள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த நிலக்கரியை இறக்கும் பணி நேற்று (26) ஆரம்பமாகியதாக லங்கா நிலக்கரி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு மேலும் 4 நிலக்கரி கப்பல்கள் டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வரவுள்ளன.

புதிய ஏற்றுமதியின் மூலம் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தடையின்றி மேற்கொள்ள முடியும் என லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version