ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆய்வு செய்துள்ளார்.

அணு ஆயுதத்தை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் மற்றும் குறைந்த உயரத்தில் அதிக வேகத்தில் பறந்து விமானப்படை மற்றும் கடற்படை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் தயார் நிலை குறித்த ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது.

இதனை ஜனாதிபதி புடின் ஆய்வு செய்ததாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சக்தி குறைந்த அணு ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு எதிராக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அணு ஆயுத பாதுகாப்புப் படையின் தலைவர் இகோர் கிரில்லோ குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த பின்னணியில் தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய தாக்குதல் 9 மாதங்களை கடந்துள்ள நிலையில், ரஷ்யாவின் தற்போதைய அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை, உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற அச்சத்தை தூண்டியுள்ளது.

Share.
Exit mobile version