சந்தையில் காணப்படும் கோதுமை மா பாவனைக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் நேற்று (25) கொழும்பில் தெரிவித்தார்.
கோதுமை மாவின் தற்போதைய தரநிலை குறித்து இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கோதுமை மா மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய மாவு தொடர்பில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் உணவக உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல பொது அமைப்புகளும் கலந்து கொண்டன.