வடக்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் நிலநடுக்கம் காரணமாக சர்வதேச விமான நிலையத்தை மூட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

டோலோரஸுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம், தெற்கே 330km தொலைவில் உள்ள தலைநகர் மணிலா வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ககாயன் மாகாணத்தில் குறைந்தது இரண்டு நகரங்களில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை பல பாலங்கள் மற்றும் வீதிகளும் சேதமடைந்துள்ளன.

Share.
Exit mobile version