வெல்லம்பிட்டிய-கொட்டுவில பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கூரிய ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக முகாமில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள், கத்திகள் மற்றும் மன்னா கத்திகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுக்காக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் 20 மற்றும் 27 வயதுக்கு இடைப்பட்ட தம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.