முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் விலங்கு உணவுத் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட காரணங்களால், சுமார் 50 வீதமான முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காலங்களில் முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்தமையால், அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தது.

இந்த கட்டுப்பாட்டு விலை மூலம் ஏற்படும் நஷ்டம் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,000 முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

Share.
Exit mobile version