முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, துரதிஷ்டவசமாக அதிலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நிகபொத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது முச்சக்கர வண்டியில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெரகல-வெல்லவாய பிரதான வீதியின் பிபிலஹேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்திற்கு முன்னதாக நெஞ்சு வலிப்பதாக கணவர் திடீரென கூறியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அப்போது முச்சக்கரவண்டியில் இருந்து திடீரென தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவி குறிப்பிட்டார்.
பின்னர், சாரதியின்றி முன்னோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மரத்திலும், மின்கம்பத்தில் மோதி நின்றதாக குறிப்பிட்டார்.
முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாரதி பின்னர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.