(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் A.R.M. அமீர் அவர்களின் வழிகாட்டலில் 20 கழகங்கள் பங்கு கொள்ளும் “சிராஸ் மீராசாஹிப் வெற்றிக் கிண்ணம் ” மாபெரும் கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 22.10.2022 சனிக்கிழமை மருதமுனைக் கடற்கரையில் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், மெற்றொ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மளேனத்தின் தலைவர் Y.K.றஹ்மான் ,செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் அவர்களும் ,பொருளாளர் முகம்மட் கான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 06.11.2022 ஞாயிற்றுக் கிழமை இடம் பெரும்.

Share.
Exit mobile version