வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது.
இதற்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது.
நாளை(25) காலை இந்த சூறாவளி பங்களாதேஷ் கடற்பிராந்தியம் நோக்கி நகரக்கூடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த சூறாவளியினால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(24) 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.