ரஷ்யாவில் போா் விமானம் குடியிருப்புக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உயிரிழந்தனா்.

இா்குட்ஸ்க் மாகாணத்தின் சைபீரியா நகரத்தில் ரஷ்யாவில் எஸ்யு-30 போா் விமானம் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென இரு மாடி குடியிருப்புக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனா். குடியிருப்பில் உள்ளவா்களுக்கு காயம் ஏற்படவில்லை என மாகாண ஆளுநா் இகோா் கோப்சேவ் தெரிவித்தாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னா் மற்றொரு ரஷிய போா் விமானம், அசோவ் துறைமுகம் அருகே குடியிருப்பு ஒன்றின் பக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது.

Share.
Exit mobile version