நாட்டின் தேவைக்கு அதிகமாக இறப்பரை இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டில் இறப்பரின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்.ரஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு நாட்டின் தேவைக்கு அதிகமாக 16000 மெற்றிக் தொன் இறப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமாக 13000 மெற்றிக் தொன் இறப்பர், 2019 இல் 12000 மெற்றிக் தொன், 2019 இல் 14000 மெட்ரிக் தொன் மற்றும் இந்த ஆண்டு 10000 மெற்றிக் தொன் இறப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாட்டின் ஏற்றுமதி தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நாட்டின் தேவைக்காக மட்டுமே ரப்பர் இறக்குமதியை ஒழுங்குபடுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version