நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் நாடாளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்குப் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து நாடாளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

எனவே, பாடசாலை அதிகாரிகள் தங்களது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலமாகவும் 011 2777 473 அல்லது 011 2777 335 என்ற தெலைநகல் இலக்கங்கள் மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும்.

Share.
Exit mobile version