சீனாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ஹு ஜின்டாவோ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
பெய்ஜிங்கில் உள்ள அரங்கம் ஒன்றில் இன்று நடைபெற்ற மாநாட்டின்போது ஜனாதிபதி ஜி ஜின்பிங் அருகில் முன்னாள் ஜனாதிபதி 79 வயதான ஹு ஜின்டாவோ அமர்ந்திருந்தார்.
அப்போது இரண்டு பணியாளர்கள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாமாக வெளியே அழைத்துச்சென்றனர்.