காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
குறைந்த தேவை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிஷீல்ட் உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா, அஸ்ட்ராஸெனெகாவின் வக்ஸெவ்ரியா உள்ளூர் தடுப்பூசி அளவை உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் வழங்கப்படும் டோஸ்களில் 90 சதவீதத் க்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும்.
இந்தியா இரண்டு பில்லியனுக்கும் அதிகமான அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தது இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2022இல், இந்தியா சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கும் பூஸ்டர்களை வழங்கத் தொடங்கியது. இது பின்னர் அனைத்து பெரியவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.