ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்றத்தில் வழங்கப்படும் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஊடகவியலாளர்களுக்கு 25 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த தேநீர் 100 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் உணவு, தேநீர் மற்றும் சகல வசதிகளுக்காக சுமார் ஆயிரம் ரூபா அறவிடப்படும் வேளையில் ஊடகவியலாளர்களின் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஊடகவியலாளர்களின் மதிய உணவின் விலையும் கடந்த மாதத்திலிருந்து நூற்றைம்பது ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version