அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில், பாம்பு இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனர்.

கடந்த திங்கட்கிழமை யுனைடர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நியூ ஜெர்சியில் தரையிறங்கிய போது, வணிக வகுப்பில் இருந்த பயணிகள், அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.

உடனடியாக நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version