கொள்ளுப்பிட்டி C எவென்யு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலம் சுமார் 40 முதல் 50 வயதுடைய ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version