ஊடக வெளியீடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் அவசர திருத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட சாதாரண சேவையின் (ஒருநாள் சேவை தவிர்ந்த) கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மே மாதம் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீள ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மே மாதம் 05, 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரமெடுத்து, வருகை தரும் திணைக்களத்திலிருந்து இலக்கம் அல்லது முத்திரையைப் பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மாத்திரம் மே 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 05 ஆம் திகதி ஒப்படைக்கவும்.

மேலும், கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை மே 10ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒப்படைப்பதற்கான சந்திப்பை மேற்கொள்வது அவசியமாகும்.

http://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று அல்லது தொடர்பு இலக்கம் 0707101060 மூலம் சந்திப்பை மேற்கொள்ளலாம்.

தற்போது ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக திணைக்களத்தின் தொழிநுட்பப் பணியாளர்கள் கணனி முறைமையின் திருத்தப் பணிகளில் துரித கதியில் கலந்துகொள்வதுடன் கூடிய விரைவில் ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் வருந்துவதுடன், திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள், பிராந்திய அலுவலகங்களினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கன்ட்ரோலர் ஜெனரல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

Share.
Exit mobile version