உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டள்ளது.

இந்த இராணுவ பொதியில், ஹிமார்ஸ் ரொக்கெட் லொஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version