நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் சுவாச நோய்களுக்காக வாங்கப்பட்ட சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கை கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டதென்றும் அதன் காரணமாக அனைத்து சுவாச நோய்களும் குறைந்துவிட்டன என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version