பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண தலைமை காரியால கட்டடத்தொகுதி திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று (13) வருகை தந்த பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த யாழில் பனங்கள்ளு குடிப்பதற்கு அலைந்ததாக தெரிவித்தார்.

அந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுமார் 45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டு வந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் (நேற்று) ஒரு புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பனை அபிவிருத்து சபையின் தலைவரின் முயற்சியின் பயனாக இன்றைய தினம் சொந்த கட்டடத்தில் நீங்கள் குடியேறுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இங்கே பனை சார் உற்பத்தி பொருட்களின் செயற்பாடு அதிகம் காணப்படுகின்றது.

பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ள இடமாக வடபகுதி காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனங்கள்ளு தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனங்கள்ளு இல்லை. இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகள் அதிக கேள்வி காணப்படுகின்றது,

வடபகுதி மக்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுவது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிகாட்டுதலின் கீழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை நாங்கள் முன்னெடுப்போம். மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை. அவர் மீண்டும் பிரதமராகலாம்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கிறாரே தவிர அவரை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் கோரவில்லை. அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தெரிவு இடம்பெறும்போது அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்தியகூறு காணப்படுகிறது. எனினும் தற்போதுள்ள பிரதமருக்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றோம் என்றார்.

Share.
Exit mobile version