நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட நிலைய பொறுப்பதிகாரியுடன் தாக்குதல் மேற்கொண்டு தப்பி ஓடிய கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை எரிவாயு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடையில் அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த கடையின் உரிமையாளரும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட நிலைய அதிகாரியும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version