கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்று தங்கப்பதக்கங்கள் பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றத் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் செல்வன் MM. றிஹான் அவர்களும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் செல்வி MN. பாத்திமா சஜா அவர்களும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்து, 6 வருடங்களின் பின்னர் தனி நபர் நிகழ்ச்சிகளில் பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.
இதற்கு முன்னர் பாடசாலை வரலாற்றிலேயே முதன் முறையாக, அஞ்சலோட்டப்போட்டியில் 14 வயதுக்குட்பட்ட அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகளுக்குக் காரணமான மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் UL. ஷிபான், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாகிய MAM. றியால், AWM. அஸாட்கான் மற்றும் JM. அல் அஸ்ரார் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக பாடசாலை முதல்வர் MSM. பைஷால் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், போட்டியாளர்களுடன் சென்று, அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள், விளையாட்டுக்குழுவின் பயணத்துக்காக பல வழிகளிலும் உதவி புரிந்த நலன் விரும்பிகளுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், இவ்விளையாட்டு நிகழ்வுகளில் எமது பாடசாலை இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று, கல்முனைக் கோட்டத்திலிருந்து பங்குபற்றிய பாடசாலைகளில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)