சமூக வலைதளங்கள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசில்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக 11,627,175 ரூபாவை தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளார்.

இதன்படி பணமோசடி சட்டம், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அங்கொட-ஹிம்புட்டான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version