இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பல ஆரவாரங்களுக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா 1953இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version