பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக பொழுதுபோக்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version