தற்போதைய ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இதன்படி, சிப் கொண்ட தற்போதைய ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Share.
Exit mobile version