நாட்டுக்கு வெவ்வேறு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பாக வீண் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எரிக் சோல்ஹைம்மின் விஜயம் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை ஒரு சுயாதீன அரசு என்ற ரீதியில் ஏனைய அரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாது என தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் நாம் அனைத்து நாடுகளுடனும் பிரிவினையற்ற வெளியுறவுக் கொள்கையின் ஊடாக பயணிப்பதற்காகவே செயற்படுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version