ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்படி, கடுமையான கடன் நெருக்கடி காரணமாக உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டிய 05 நாடுகளில் இலங்கையும் உள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகில் வறுமையில் வாடும் பகுதிகள் மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இதனால், உலகில் சுமார் 54 நாடுகள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.