மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு, கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் சூரிய சக்தி மின்நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதற்கமைய சுமார் 2.5 பில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த சூரிய சக்தி மின்நிலையத்தின் ஊடாக பிறப்பிக்கப்படும் மின்சாரமானது நேரடியாக மின்சார சபைக்கு வழங்கப்பட்டு மக்கள் பாவனைக்கான பொது மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 40 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சூரிய சக்தி மின்நிலையத்தில், மேலதிகமாக உள்ள நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version