கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சீரான நிலையில் காணப்பட்டாலும், இன்று (11) தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றமடைந்துள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சிலவற்றின் விலைகள் மிகவும் சிறிதளவு அதிகரித்திருந்தாலும், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் சரிவைக் காணலாம்.

ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலை 170,900 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, ஒரு பவுண் (22 கரட்) தங்கத்தின் விலை 156,750ஆக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு பவுண் (21 கரட்) தங்கத்தின் விலையானது 149,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version