இலங்கையில் அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு அவுஸ்திரேலியர்கள் இன்று (11) சிட்னி பிராந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் சிட்னியில் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவின் துணை நிறுவனமாக இருந்த SMEC இன்டர்நேஷனல் நிறுவனம், இலங்கையில் இரண்டு திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த இருவரும் 3 இலட்சத்து நான்காயிரத்துக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலரை இலஞ்சமாக வழங்க முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share.
Exit mobile version