நாட்டில் விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை விசேட வைத்தியர்கள் தொடர்பில் மாத்திரம் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்வது தவறாகும். ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், சுகாதார துறையில் கடமையாற்றும் அனைவரின் வயதெல்லையிலும் பாரபட்சமின்றி மாற்றங்கள் கொண்டுவரப்படுவது அவசியமாகும் என்றார்.

Share.
Exit mobile version