ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கி உள்ளார்கள். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று மாலை தொடங்கிய என்கவுண்டர் நள்ளிரவு வரை நீடித்தது. இதையும் படியுங்கள்: குஜராத்தில் இன்று 2-வது நாள் பயணம்: பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடை பெற்று வருகிறது. அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் தான் சோபியான் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று இருந்தனர். இதில் 3 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வன் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவன் ஆவான்.