ஸ்கொட்ரெயில் ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பரவலான இடையூறு ஏற்படும் என ஸ்கொட்ரெயில் எச்சரித்துள்ளது.

ஓட்டுநர் அல்லாத ரயில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சமீபத்திய ஊதிய சலுகையை ஆர்.எம்.டி. தொழிற்சங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்புத் தொழிலாளி, நிலைய ஊழியர்கள், நடத்துனர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிய மாட்டார்கள்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட நியாயமான சலுகைக்காகப் போராடும் போது, இதுபோன்ற கடினமான விடயங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என ஆர்.எம்.டி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கொட்ரெயிலால் சமர்ப்பிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சலுகையை உறுப்பினர்கள் ஏற்க பரிந்துரைக்க மாட்டார்கள் என்று ஆர்.எம்.டி. கூறியபோது வேலைநிறுத்தம் வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Share.
Exit mobile version