இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கெக்குனவல நேற்று(05) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இவரை கடந்த இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு நீதவான் அழைப்பாணை விடுத்திருந்தார். இருப்பினும் அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால் நீதிமன்ற அலுவல்கள் இடம்பெறவில்லை.

அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பொது நிதியை மோசடி செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

*(அரசாங்க தகவல் திணைக்களம்)*

Share.
Exit mobile version