சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை ஒட்டி நடைபெற்ற இறுதி நிகழ்வானது கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தின் இஸ்லாமாபாத் பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் I.L. அர்சுதீன் அவர்களின் தலைமையிலும் வங்கி வலய முகாமையாளர் M. புவிராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இஸ்லாமாபாத் சிறுவர் பூங்கா வளாகத்தில் 2022.10.07 திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM.சப்றாஸ் அவர்களும்,
கல்முனைப் பிரதேச செயலக பிரதேச செயலாளர் J.லியாகத் அலி அவர்களும் , விஷேட அதிதியாக கல்முனை பிரதேச செயலக தலைமைப் பீட முகாமையாளர் ARM.சாலீஹ் அவர்களும், அதிதிகளாக இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியால அதிபர் AG.M.றிசாத் ,
சமுர்த்தி கருத் திட்ட முகாமையாளர் AMS.நயீமா , சமுர்த்தி மகாசங்க முகாமத்துவ பணிப்பாளர் SS பரீரா , மருதமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ALM. நஜீப், நட்பட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் MAM .பைசால் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவி முகாமையாளர்கள், வங்கி உதவி முகாமையாளர்கள், பிரிவுக்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகங்களின் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சியான பொல்லடி வரவேற்புடன் ஆரம்பமான இந் நிகழ்வில் கலை கலாச்சார மற்றும் பாரம்பரிய சிறுவர் விளையாட்டுக்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், முதியோர் நிக்ழ்ச்சிகள், 5ம் ஆண்டு புலமைப் பரிசில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கெளரவிப்பு என் பனவற்றுடன் ,நடைபெற்ற சிறுவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சான்றிதழ் வழங்கல் மற்றும் கிண்ணம் வழங்கல் என்பனவற்றுடன் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு S.L.M .நபீல் , I.D.M. கோழிப் பண்ணை (றிஸ்வி), A.B. நௌபீர்,I.M.அன்வர் ஆகியோர் அனுசரணையாளர்களாக செயல்பட்டனர். இந்நிகழ்வானது பிரதேச மக்களால் மிகவும் விரும்பத்தக்கதும் பாராட்டுக்குரிய நிகழ்வாகவும் காணப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதான ஊடக அனுசரணையாளராக பப்ளிக் நியூஸ் ( Public News) செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.




Share.
Exit mobile version