பங்கீ ஜம்பிங் என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டினை அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தாமரை கோபுரத்தில் காட்சிப்படுத்துவதற்காக தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் மற்றும் “பன்கீ” நிறுவனம் நேற்று (07) ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.
இந்த சாகச விளையாட்டில் சுமார் 350 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்து விளையாடுவது வெளிநாட்டினரால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாகும்.
ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் சுமார் 100 முறை கோபுரத்தில் இருந்து கீழே குதிக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், இரவு வேளைகளில் 40 முறை இந்த சாகச நிகழ்வை காட்சிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தாமரை கோபுரத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
மேலும், இந்த விடயத்திற்காக சுமார் 50,000 பேர் கொண்ட குழுவொன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.