அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கைதிகளுக்கு இறைச்சி தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பெரிய சமையல் பாத்திரத்தில் விழுந்ததில் ஏற்பட்ட தீக்காயங்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
கொலைக்குற்றச்சாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தத. இந்நிலையில் கைதி, 25 வருட சிறைவாசத்தின் பின்னர் 2028ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கைதி உயிரிழந்துள்ளதாக கைதியின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் 10 தினங்கள் தொடர்சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.