கொலன்னாவை எண்ணெய் முனையத்தை தமது பௌசர்கள் சென்றடைந்த போதிலும் போதியளவு எரிபொருள் வெளியிடப்படவில்லை என பௌசர் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இதேவேளை இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் தாங்கி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே நாடு முழுவதும் கடுமையான டீசல் மற்றும் பெற்றோல் வரிசைகள் எழுந்துள்ளன மற்றும் சில பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும் பெற்றோல் களஞ்சியசாலைகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்புக்காக வழங்கப்படுவதால் டீசல் இருப்புகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version