22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற குழு ஒரு கருத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் மற்றொரு கருத்தையும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளன.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முதன்முதலில் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாற்றமான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தநிலையிலே பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version