முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவு வலுப்படுத்த திருகோணமலையில் புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘பள்ளிவாசல் சுற்றுப்பயணம்’ என குறிப்பிடப்படும் இந்த தனித்துவமான சர்வ மத நிகழ்வு, இன்று (புதன்கிழமை) திருகோணமலை அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள அல்ஹீலூர் ஜீம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

குறித்த சுற்றுப்பயணத்தில் உறவு ரீதியான வரவேற்பு, ஒழுங்கு படுத்தப்பட்ட பள்ளிவாசல் தரிசிப்பு, வணக்க வழிபாடுகளை நேரடியாக காண்பித்தல், இஸ்லாம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை தெளிவுபடுத்தல், முஸ்லிம்களின் கட்டடக்கலை வரலாறு, ஆன்மீக விழுமியங்கள் போன்றவற்றை அறிந்து கொள்தல், சுவரொட்டி கண்காட்சி என்பன இடம் பெற்றன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் மும்மத தலைவர்கள், அரச அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பங்கேற்றதோடு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக அனைத்து மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்த விடயத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

Share.
Exit mobile version