மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாளரை இடமாற்ற கோரி போக்கு வரத்துசபையின் நடத்துனர்கள் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

4 தொழிற்சங்கங்களும் இணைந்து முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பினால், இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வெளிமாவட்ட மற்றும் குறுந்தூர பஸ் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது.

போக்குவரத்து சபையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட முன்னாள் முகாமையாளருடன் பிரதி முகாமையாளர் பல இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் 10 நடத்துனர்களை வேலையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளதாகவும் சாரதிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அத்துடன், இதுதொடர்பான ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், தமக்கு நீதி கிடைக்கும்வரை இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என தொழிற்சங்க தலைவர் துரைராஜா தெரிவித்தார்.

Share.
Exit mobile version