இந்த வார காலப்பகுதியில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 250 ரூபாவினால் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அதற்கான அனுமதி இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவுடன் கூடிய சுமார் 100 கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

துருக்கி மற்றும் டுபாயில் இருந்து அண்மையில் கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்த அவர், ஏற்றுமதியில் ஏற்பட்ட தாமதம் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது.

பாராளுமன்றத்தில் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Share.
Exit mobile version