தென்மேற்கு ஜப்பானின் மியாஸாகி மாகாணத்தில் நள்ளிரவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஒசு தீபகற்பத்துக்கு அருகே 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் திறன் ரிச்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ககோஷிமாவில் உள்ள சென்டாய் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version